தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்யும் என்றும், மதியத்திற்கு மேல் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் 9ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories