Categories
மாநில செய்திகள்

ALERT: மக்களே சீக்கிரமா போங்க….! செப்டம்பர் 30 வரை மட்டும் இலவசம்….!!!!

கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஓமைக்ரான் 85% செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது இந்நிலையில், செப்டம்பர் 30 வரை மட்டும் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வரும் செலுத்தப்படும் என்பதால், மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 75வது சுதந்திர தின விழாவையொட்டி ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 18-59 வயதுடையவர்களுக்கு அரசு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்குகிறது.

இதை அவர்கள், அரசு மருத்துவ கல்லூரிகள், அரசுமருத்துவமனைகள், சுகாதர நிலையங்களில் போட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது. செப்டம்பர் 30 வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் சீக்கிரமாக செலுத்த வேண்டும். எனவே இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |