தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி9இன்று ) வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எடுத்துள்ளது. நேற்று மின்னல் தாக்கி விருதுநகரை நான்கு பேர், கள்ளக்குறிச்சியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.