Categories
தேசிய செய்திகள்

ALERT: மார்ச் 31 தான் கடைசி நாள்… உடனே இதை பண்ணுங்க…. SBI முக்கிய எச்சரிக்கை…!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு பான் கார்டுடன் ஆதார் எண்ணை  இணைக்க வேண்டும் என மீண்டும் எச்சரித்துள்ளது.

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாளமாகும். ஆதார் கார்ட் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாது. அதேபோல் பணப் பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் பான் கார்டு என்பது கட்டாயமாகும். இந்த ஆதார் கார்டையும் பான் கார்டையும் பொதுமக்கள் அனைவரும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சற்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயத்தில் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்து 2022ஆம் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டு ஆதார் எண் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு  இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும்.

அதன்பின் வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் வருமானவரித் துறையின் வெப்சைட்டிலேயே பான் ,ஆதார்  இணைப்பு வசதி உள்ளது. அதில் போன் நம்பரையும் ஆதார் நம்பரையும் கொடுத்தாலே போதும் ஈசியாக இணைந்துவிடும். 2022 ஜனவரி 24 நிலவரப்படி மொத்தம்43.34 கோடி பான் கார்டுடன் ஆதார் உடன் இணைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |