Categories
தேசிய செய்திகள்

ALERT: மீண்டும் தீவிர ஊரடங்கு?…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் நாட்டில் 24 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய வில்லை. 63 சதவீதம் பேர் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவில்லை. 45 சதவீதம் பேர் முறையாக முக கவசம் அணிவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால் மக்கள் அனைவரும் முறையான கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்

Categories

Tech |