Categories
தேசிய செய்திகள்

ALERT: மே 23-ந் தேதி புதிதாக…. உச்சக்கட்ட எச்சரிக்கை….!!!!

அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே நேற்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கன மழையும் கொட்டி தீர்த்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வங்ககடலில் மே 23 ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 150 முதல் 200 ஆண்டுகளில் அரபிக் கடலை விடவும் வங்ககடலில் நான்கு மடங்கு அதிகமான புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |