Categories
மாநில செய்திகள்

ALERT: யாரும் போகாதீங்க! தமிழகத்தில் அக்.,20 முதல்… உச்சக்கட்ட அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், குமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 20 முதல் மீண்டும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் கேரளா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

Categories

Tech |