தமிழகத்தில் கடந்த 25 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21 சதவீதம் அதிகமாக மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை, நாகை, நெல்லை, ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மிதமான மழையும் நாளை கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.