Categories
வானிலை

ALERT : வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்…. வானிலை எச்சரிக்கை….!!!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே நகர்ந்து மார்ச் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே நகர்ந்து மார்ச் 21ஆம் தேதி புயலாக வலுப்பெறும்.

இந்த புயல் 22ஆம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை நெருங்கும். இதன் காரணமாக அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |