வாடிக்கையாளர்கள் நிதி மோசடிகளில் சிக்காமல் இருக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகும். இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் நலன் குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து ஆன்லைன் மோசடிகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.இதனால் வாடிக்கையாளர்கள் செய்யும் சிறு தவறு பெரிய ஆபத்தில் முடியலாம். வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தும் திருடப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் நிதி மோசடிகளில் சிக்காமல் இருக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறது. தற்போது புதுவகையான நிதி மோசடி குறித்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து QR CODE கோடு மோசடி, வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது எஸ்.எம்.எஸ் லிங்க் மூலமாக ஏதாவது QR CODE வந்தால் அதை ஸ்கேன் செய்யவோ கூடாது என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை செய்துள்ளது.இந்த QR CODE மூலமாக கட்டணம் செலுத்தும் முறை இப்போது பரவலாக நடைமுறையில் உள்ளது.
அதில் பேடிஎம், கூகுள் பே, போன்பே போன்ற மொபைல் ஆப் மூலமாக கடைக்காரர்களின் QR CODE ஸ்கேன் செய்து எளிதாக பணம் செலுத்த முடிகிறது. அதேபோல நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த கோடு மூலமாக ஸ்கேன் செய்து பண பரிவர்த்தனை செய்ய முடிகிறது. நேரடியாக கண் முன்னே ஸ்கேன் செய்வதால் இதில் பெரும்பாலும் மோசடி செய்யப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் வேறு இடத்தில் இருந்துகொண்டு நமக்கு QR CODE அனுப்பும்போது அதை ஸ்கேன் செய்தால் நம்முடைய வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போக வாய்ப்புள்ளது. இது சம்பந்தமான செயல்பாடுகள் குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது 44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.