தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.