Categories
மாநில செய்திகள்

ALERT : 10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று இரவு சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |