Categories
மாநில செய்திகள்

ALERT : 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை…… வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

அதன்படி, வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், குமரி கடல், மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோர பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது.

Categories

Tech |