Categories
மாநில செய்திகள்

ALERT: 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. இதற்கு அசானி என பெயர் சூட்டப்பட்ட நிலையில் ஆந்திரா ஒடிசா மாநிலங்கள் இந்த புயல் மிரட்டி வந்தது. இந்நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |