தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் வரை வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை எச்சரித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.