Categories
ஈரோடு தர்மபுரி மாநில செய்திகள்

இந்த பகுதியில் இருக்காதீங்க….. தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு….. அபாய எச்சரிக்கை….!!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சமீப நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், நிலச்சரிவு ஆறுகளில்  காட்டாறு வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகள் மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல ஆறுகள், அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஈரோடு பவானி சாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அணைகள் மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், காவிரி கரையோர மக்கள் அதிகாரிகளின்  அறிவுரையை கேட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்று தஞ்சம் அடைந்து கொள்ளுமாறும்அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், தர்மபுரி மாவட்ட நிர்வாகமும், மாவட்டத்தின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |