தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. நவ.,18-ல் வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு மையமானது புயலாகவும் மாறவும் வாய்ப்பு அதிகம். இதனால் தமிழகத்தில் 19 வரை 21 வரை கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை மற்றும் தென் தமிழக பகுதியை இந்த காற்றழுத்த தாழ்வு மையம் கடக்க இருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.