Categories
மாநில செய்திகள்

Facebook-ல்… பெண்களுக்கு அலார்ட் செய்தி…!!!

கொரோனா காரணமாக தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததால் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும்பாலும் ஆன்லைனிலேயே தங்களது நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இதை சிலர் தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அதனை வைத்து மிரட்டி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் பெண்கள் தங்களது புகைப்படங்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டினால் உடனே எங்களுக்கு புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |