Categories
கிரிக்கெட் விளையாட்டு

அலெக்ஸ் கேரியின் தாடையை உடைத்த ஜோப்ரா ஆர்ச்சர்…. ஆஸி 30 ஓவரில் 130/5..!!

ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்தில் அலெக்ஸ் கேரியின் தாடையில் பட்டு ரத்தம் சொட்டியது  

உலக கோப்பை 2-வது அரை இறுதியில்  ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் பிஞ்ச் 0 ரன்னில் எல்.பி. டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு டேவிட் வார்னர் 09, பீட்டர் ஹேண்ட்ஸ் காம்ப் 4 என இருவரது விக்கெட்டையும் கிறிஸ் வோக்ஸ் வீழ்த்தினார். இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித்துடன் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். அடுத்து 8-வது ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரில் கடைசி பந்தை அலெக்ஸ் கேரி எதிர் கொண்டார்.

ஆர்ச்சர் வீசிய அந்த பவுன்சர் பந்து எதிர்ப்பாராத வகையில் கேரியின் தாடையை பலமாக தாக்கியது. இதில் ஹெல்மெட் கழன்றது. அலெக்ஸ் கேரியின் தாடையில் இருந்து ரத்தம் சொட்டியது. இதையடுத்து அவருக்கு அடிபட்ட இடத்தில்  முதலுதவி அளிக்கப்பட்டது. அணி மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதால் கேரி ஆட்டத்தை தொடங்கினார்.

இருவரும் சிறப்பாக விளையாடினர் . அலெக்ஸ் கேரி தாடையில் கட்டு போட்டு விளையாடி வந்தார். சிறப்பாக ஆடிய அவர் 40 ரன்களில்ஆதில் ரசித் ஓவரில் ஆட்டமிழக்க அதை தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.  தற்போது ஸ்மித் 59 ரன்களுடனும்,  மேக்ஸ்வெல் 3 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். ஆஸி அணி 30  ஓவரில் 5 விக்கெட் இழந்து 130 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Categories

Tech |