Categories
உலக செய்திகள்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையவுள்ள அல்ஜீரியா…. அதிபர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

அல்ஜீரிய நாட்டின் அதிபரான அப்டெல்மட்ஜித் டெபோன் பிரிக்ஸ் கூட்டமைப்பில் தங்கள் நாடு சேரவிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

அல்ஜீரியா, ஆப்பிரிக்க கண்டத்திலேயே இயற்கை எரிவாயு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில், அந்நாட்டு அதிபர், தங்கள் நாடு பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர இருப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பானது உருவாக்கப்பட்டது.

இதில், ரஷ்யாவும் சீனாவும் முக்கிய அங்கமாக இருக்கின்றன. உலகின் பல நாடுகளும் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த ஜூன் மாதத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்குவது குறித்து பேசியிருக்கிறார். அதன்படி அல்ஜீரியா, பிரிக்ஸ் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளும் உறுப்பினர்களாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |