அலிபாபா நிறுவனத்திற்கு தடை விதிப்பது பற்றி தனது நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கின்ற கெடோ பிராந்தியத்தில் இராணுவ முகாம் மீது தாக்குதல் மேற்கொண்ட 4 பயங்கரவாதிகள் இராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கு ஜனாதிபதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சீனாவின் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ள டிரம்ப் நிர்வாகம், தற்போது சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா நிறுவனத்திற்கு தடை விதிப்பது பற்றி தனது நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.