பிரதமர் நிவாரண நிதிக்கு சேமிப்பை வழங்கிய சிறுமி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக போலியான வீடியோ வைரலில் பரவி வருகின்றது.
உலக நாடு முழுவதும் ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனால் கொரோனா நோயாளிகளின் அதிகரித்து மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நிவாரண நிதிக்கு காசியாபாத்தை சேர்ந்த சக்தி பாண்டே என்ற சிறுமி தனது சேமிப்பு தொகையில் இருந்து ரூ5.100 வழங்கியுள்ளதாகவும், அதன்பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் உயிரிழந்துவிட்டதாக கூறி வீடியோ வைரல் ஆகி வருகின்றது. ஆனால் வைரலாகி வரும் வீடியோவை ஆய்வு செய்ததில் பிரதமர் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பு தொகையை வழங்கிய அந்த சிறுமி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகி அதன்பின் நலமுடன் உள்ளார் என தெரியவந்துள்ளது.
எனவே வைரல் பதிவுகளில் உள்ளது போன்று அந்த சிறுமி உயிர் இறக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்று போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலியான செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட நேரிடுகின்றது.