தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் விந்தியாவிற்கு, உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை வித்யா முதன்முதலாக ‘சங்கமம்’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன்பின் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்துள்ளார். இவருக்கு நடிகை பானுப்ரியாவின் சகோதரனுடன் 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்யப் பட்டது. திருமணம் செய்து சில வருடங்களே விவாகரத்து வேண்டும் என்று வாங்கிகொண்டார். அதன்பின் திரை உலகில் முக்கியம் காட்டாத விந்தியா அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார்.
பிறகு 2011ஆம் ஆண்டு தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் பங்கேற்று வரும் விந்தியாவுக்கு சென்ற ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு அரங்கேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்கும் சென்று திமுகவிற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென தான் உயிருடன் இருக்கும்போதே சுவர்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்ட விந்தியா திமுகவினர் தான் இதனை செய்திருக்க வேண்டும் என்று இது போன்ற போஸ்டர்களை பார்த்தால் இன்னும் ஆயுள் கூடும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.