Categories
அரசியல் மாநில செய்திகள்

5,000பேர் இருந்தாங்க…! வெறும் 4பேர் கலக்கிட்டாங்க… உங்க அப்பன் வீட்டு சொத்தா இது… சீறிய ஓபிஎஸ் ஆதரவாளர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி,  ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வரக்கூடாது என சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு ? இவர்களுக்கு தைரியம் இருந்தா நாளைக்கு பொதுக்குழுவில் தேதியை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். நிரந்தர பொதுச் செயலாளர் தானே அதை அறிவிக்க சொல்லுங்கள் தைரியம் இருந்தால், ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது ?

எடப்பாடி பழனிச்சாமிக்கும் தான், கே.பி. முனுசாமிக்கும் சொல்கிறேன் இருக்கின்ற எல்லாருக்கும் தைரியம் இருக்கா என சொல்கிறேன். நாங்கள் கூட தான், எங்களை கேட்காமல் பொதுக்குழுவை கூட்டினார்கள் என்று நீக்கி வைத்திருக்கிறோம், அது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில்  இருக்கிறது,  நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

எங்களுக்கேன்ன மிரட்டல் வருகிறது, ஐதாயிரம் பேர் கூடிய நேரத்தில் ஐயாவும் 4 பேர் தான் சென்று பொதுக்குழுவை சந்தித்து வந்தார்கள், நாங்கள் எந்தவித மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம். இந்த தீர்ப்பில் நீதிபதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குள்ளே போகவில்லையே அது இன்னும் இருக்கிறது, இது ஒன்றும் அவர்கள் அப்பன் வீட்டு சொத்து கிடையாது. அண்ணா திமுக ஒவ்வொருவரின் வேர்வை சிந்தி, ரத்தம் சிந்தி உருவான கட்சி இது நாங்கள் போவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது, ஓபிஎஸ் போவதற்கும் எல்லா உரிமையும் இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |