Categories
உலக செய்திகள்

“அமெரிக்க மக்கள் ஒருவரை கூட விடாமல் மீட்டுவிடுவோம்!”.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒரு அமெரிக்க மக்களை கூட விட்டுவைக்காமல் மீட்போம் என்று கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து தற்போது வரை 13,000 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டில் மாட்டிக்கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்பது தான் தற்போதைய முக்கிய பணி என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே இது போன்ற கடினமான மீட்பு பணியை சந்தித்ததில்லை. எனினும் ஆப்கானிஸ்தானில் ஒரு அமெரிக்க மக்கள் கூட இல்லாமல் அனைவரையும் மீட்டு விடுவோம் என்றார்.

மேலும், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி சரியாக ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள், அங்கிருந்து 13,000 நபர்களை நம் ராணுவ விமானங்கள் மீட்டு விட்டது. அமெரிக்கா போன்று பல நாடுகளின் மீட்பு விமானமும் கத்தார் தளத்திற்கு வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்து சிக்கலாக உள்ளது.

எனவே, சில மணி நேரங்களாக அமெரிக்க மீட்பு விமானங்கள் செயல்படவில்லை. 20 வருடங்களாக தலிபான்களை எதிர்த்து ஆப்கானிஸ்தானில் போரிட்டுள்ளோம். அந்த காலகட்டங்களில் அங்கு எத்தனை அமெரிக்க மக்கள் குடியேறினார்கள் என்று சரியாக தெரியவில்லை.

எனினும், ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்காவிற்கு வரும் எந்த ஒரு குடிமக்களும் கைவிடப்படமாட்டார்கள். மேலும் தற்போதுள்ள சூழலில் அமெரிக்காவிற்கு உதவியதால் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள், தலிபான்களின் கோபத்திற்கு ஆளாகியிருப்பர். அவர்களும் பாதுகாப்பாக அங்கிருந்து, கட்டாயம் மீட்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |