Categories
மாநில செய்திகள்

லஞ்சம் வாங்கினால்…! ”முழு சொத்துக்களும் பறிமுதல்”…. அதிரடி காட்டிய ஐகோர்ட்… அரண்டு போன அரசு ஊழியர்கள் …!!

அரசு ஊழியர்கள் முறைகேடுகளின் சம்பாதித்த சொத்துக்களை மட்டுமின்றி முழு சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் திரு ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் படவேண்டும். முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமல்லாமல் முழு சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சங்கம் என்ற பெயரில் சாதி சங்கங்களையும், மதம் சார்ந்த சங்கங்களையும் வைத்துள்ளனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுதாரர் மற்றும் மனுதாரருக்கு பட்ட வழங்க தாசில்தார் குறித்த முழு விவரங்களையும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Categories

Tech |