சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவும் சேர்ந்து நடத்துகிறார்கள் இந்தி திணிப்பு போராட்டம் என்று.. நேத்து அவங்களும் நடத்திருக்காங்க. கேட்டா… நாம ஆங்கிலத்தை திணிக்கிறோமா? இப்படி நம்ம என்ன சொன்னாலும், அதற்கு குதர்க்கமாக ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு கூட பாஜக தலைவர் பத்திரிகையாளரை பார்த்து ”குரங்கு” என்று சொல்லிட்டாரு.
குரங்கு மாதிரி என் பின்னாடியே சுத்துறீங்க அப்படின்னு சொல்லிட்டாரு. அந்த அளவுக்கு கேவலமான ஒரு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போ நமக்கு ஒன்றிய நிதி அமைச்சர் இருக்காங்க. அமைச்சர் நிர்மலா சீதாராமன் உங்களுக்கு தெரியும். அவங்க ஒரு கேள்வி கேட்டோம்னா, அவங்க அதுக்கு சொல்ற பதில் யாராக இருந்தாலும், அசரவச்சுரும்.
இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்கா டாலர் மதிப்பு மாத்திப்பு ரொம்ப வீழ்ச்சி அடைச்சு போய்டுச்சு என்ற கேள்வி கேட்டதற்கு, அவுங்க சொன்ன பதில், நீங்க ஏன் அப்படி நெகட்டிவா பாக்கறீங்க, அமெரிக்க டாலரோட மதிப்பு உயருதுள்ள அந்த மாதிரி பாசிட்டிவா பாருங்க அப்படின்னு சொல்றாங்க. எப்படி மோடி வாயிலே வடை சுடுவாரோ, அதே மாதிரி பாஜகவை சேர்ந்த அத்தனை பேரும் வாயில வடை சூடுவாங்க என விமர்சித்தார்.