தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம். புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் தற்போதுவரை வழக்கத்தைவிட 56% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்ட தாலுகா அளவில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் கடலோர மாவட்டங்கள் அனைத்திற்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.