கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மாதத்திற்கு அனைத்து EMI களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், ரிசர்வ் வங்கி ஊழியர்களில் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறுகிய கால வட்டி விகிதம் குறைப்பு. ரெப்போ விகிதம் குறைப்பால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தும்.
ரெப்போ வட்டி விகிதம் 5.15%-இல் இருந்து 4.20% ஆக குறைப்பு. சிறு, குறு பொருளாதார வட்டங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தவணைகளையும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் தொழில் நிறுவனங்கள், பொது மக்களுக்கு குறைந்த வட்டியில், வங்கிகள் கடன் வழங்க வாய்ப்பு கிடைக்கும்