வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இனி வரக்கூடிய காலங்களில் அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு சட்டம் கடுமையாக அமல் படுத்தப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் பல மாநிலங்களில் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி,பல தொழில் நிறுவனங்கள் இயங்க தொடங்கியுள்ளன .
அரசு நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் கீழ் ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், அந்த சதவீத எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அனைத்து வங்கிக் கிளைகளும் 100% ஊழியர்களுடன் செயல்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் மீண்டும் வழங்கப்படும் என மாநில வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேவைப்படும் இடங்களில் நடமாடும் ஏடிஎம் மூலமாக பணம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.