மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.
ஊட்டி கடநாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு, மக்கள் திட்டமிடல் இயக்கம் என பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கடநாடு பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்றும், அடிப்படை வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஊராட்சிதுரையினர் அரசின் திட்டங்களை மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் உரிய முறையில் பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்மார்களுக்கு ஊட்டசத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம், 7 பயனாளிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மருத்துவ பெட்டகம் ஆகியவை வழங்கியுள்ளார்.
இதனைதொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 16 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டியுள்ளனர். இந்த கூட்டத்தில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவக்குமார், ஊரக வளர்ச்சி முகமாய் திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊராட்சி உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.