வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு வெளிநாட்டில் இருந்து கொரோனா நன்கொடைகள் வந்த வண்ணம் உள்ளது. இப்படி பெறப்படும் கொரோனா நிவாரண பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.