கர்நாகவில் காங்கிரஸ் கட்சி அமைச்சர்களை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட , காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் அதிருப்தி எம்எல்.ஏக்கள் 12 பேர் நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக குமாரசாமி அரசிற்கு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், எம்எல்ஏக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர்கள் ராஜினாமா செய்த 11 எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி வழங்குவது குறித்து ஆலோசித்து வந்தனர்.இதனை தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 அமைச்சர்கள் நேற்று பதவி விலகிய நிலையில்,தற்போது மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.