Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”தடைகள் அனைத்தும் நீங்கும்” வீண் பேச்சுக்கள் வேண்டாம்….!!

கடக ராசி அன்பர்களே….!! இன்று தடைகள் அனைத்தும் அகலும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி உண்டாகும் , காணாமல் போன பொருள் இன்று கைக்கு வந்து சேரும்.  கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். சவால்களை சமாளிக்கும் நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சனையில் வழி கிட்டும். வியாபார விருத்தி உண்டாகும். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும்.  அக்கம்பக்கத்தினரிடமிருந்து சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். கவுரவம் பார்க்கும் படியான சூழ்நிலை வரும் , தேவையில்லாத பேச்சுகளை தயவுசெய்து பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நண்பர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு புத்தி சாதுரியம் வெளிப்படும். இன்று பொருளாதார நிலை சீராக இருக்கும் , மனதில் மகிழ்ச்சி இருக்கும். இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியங்களும் சிறப்பாக இருக்கும் , நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் கருநீல நிறம்

Categories

Tech |