Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி, இன்பநிதி … அமைச்சர்களின் பேச்சை கேட்கணுமா ? பட்டியல் போட்டு, DMKவை நசுக்கிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சரான பிறகு அவர்களைப் பற்றி அவருடைய அமைச்சர்கள் சொல்லி இருக்கக்கூடிய கருத்தை நான் படிக்கிறேன்..  அப்போதுதான் அந்த கேள்விக்கான முழு பதிலை கொடுக்க முடியும். வி.பி ராஜன் 1989-96 ராஜபாளையம் எம்.எல்.ஏ விரைவில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக பதவியேற்பார், அதேபோல் இன்பநீதியும் நான் இருக்கும் போதே முதலமைச்சராக வரவேண்டும்.

கே.என் நேரு அவர்கள் உதயநிதி மட்டுமல்ல,  அவரது மகன் வந்தாலும் இன்பநிதி வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம். அமைச்சர் சிவ சங்கர்,  தமிழக எம்.எல்.ஏக்களில் உதயநிதி ஸ்டாலின் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால்தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தயாநிதிமாறன் இந்தியாவிலேயே சிறந்த எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின். அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில்,  தமிழ்நாட்டில் சிறந்த எம்பி என்னுடைய மாமா தயாநிதி மாறன்.

ஆ.ராசா திராவிட தத்துவங்களை தாத்தா மற்றும் தந்தை வழியில் காப்பாற்ற போகின்ற அரசியல் தலைவராகவும்,  நிர்வாக தலைவராகவும் இன்று தமிழகம் அவரை கண்டெடுத்துள்ளது. நாசர் அண்ணன் வழக்கம்போல…  மாண்புமிகு தமிழக முதல்வர் எங்கள் குல கொழுந்துக்குக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கின்றார், எங்கள் தலைவருக்கு பின்பு எங்கள் தளபதி எப்படி இயக்கத்தை வழி நடத்தினாரோ,  அது போல் எங்களுக்கு பிறகு இயக்கத்தை வழிநடத்த ஒரு சரியான ஆளு உதயநிதி,  லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கிறார்.

இதெல்லாம் நாம் கடந்த ஒரு நான்கைந்து நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒருவர் சொல்லிவிட்டார் மெய்யநாதன்….  கலைஞர் அவருடைய மறு வடிவம் தான் உதயநிதி ஸ்டாலின், முடியவில்லை, இதுதான் நடக்கிறது என அமைச்சர்களின் பேச்சை முழுமையாக தொகுத்து DMKவினரை விமர்சனம் செய்தார்.

Categories

Tech |