தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக சொல்கிறார்கள் பிஜேபிக்காரர்கள் எப்ப பாத்தாலும் கோவிலே சுற்று சுற்றி வருகிறார்கள் என்று, உண்மைதான், பிஜேபி காரர்கள் எப்போதும் கோவிலை சுற்று சுற்றி தான் வருகிறோம், ஏனென்றால் நாங்கள் சுற்றி சுற்றிவரவில்லை என்றால் அங்கு இருப்பதையும் நீங்கள் ஆட்டைய போட்டுட்டு போயிருவீங்க.
70 ஆண்டுகளாக எவ்வளவு ஆட்டைய போட முடியுமோ போட்டுடீங்க. இப்போது தங்கத்தை வேற உருக்குகின்றேன் என்று ஒரு குரூப் கிளம்பி இருக்கிறது. இதில் வேறு சேகர்பாபு அண்ணன்… சேகர்பாபு அண்ணன் தான் உச்சகட்ட காமெடி, ரொம்ப திட்டிடிங்க என்றால் ? திடீர்னு சாமிக்கு மாலை போட்டு வேட்டியை கட்டி விடுவார்கள்..
அப்போது பார்த்து நம்மளால் திட்ட கூட முடியாது. அய்யோ அவர் வேற கோவிலுக்கு போகிறார் என்று…. அதனால் நான் சேகர பாபு அவர்களுக்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன். அண்ணா உண்மையாகவே நீங்கள் ஆன்மீகத்தை நம்பினீர்கள் என்றால், தயவு செய்து அந்த துறையில் இருந்து வெளியே வந்து விடுங்கள், நாங்கள் திட்ட மாட்டோம். ஆனால் எதிர்க்கட்சி திட்டுவார்கள் என்று தெரிந்ததும், மாலையை போட்டு விடுவீர்கள்..
எங்களால் திட்ட கூட முடியவில்லை. அதனால் சேகர் பாபு அவர்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள். நிறைய தவறு செய்கிறீர்கள், கேள்வி கேட்க வேண்டிய கடமை எங்களிடம் இருக்கிறது.ஐயப்ப பக்தராக இருக்குறீர்கள் என்றால் ? ஒரு கடினமான வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று எங்களுக்கு ஒரு மரபும் இருக்கிறது என தெரிவித்தார்.