கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல், மக்களின் வாழ்வாதாரத்தை சரி செய்வதற்கு மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், சலுகைகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு சார்பாக பல நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஒரு திட்டத்தை அறிவிக்கின்றார்.
நாடு முழுவதும் உள்ள 300000 சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமர் மோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் அடிப்படையில் பயனாளர்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் பத்தாயிரம் வரை கடன் உதவி வழங்கப்படும். கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துபவர்களுக்கு 7 சதவீத வருடாந்திர வட்டி மானியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் அபராதம் ஏதும் விதிக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.