தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு இருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு பல்வேறு முடிவுகளையும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை குறைக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் சிறப்பு கவனம் தேவை. மக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டுமென என்றும் தெரிவித்துள்ளது.