Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – இன்று முக்கிய செய்தி…!!

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் குறித்து இன்று ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் நெரிசல் காணப்படும். இதை தவிர்ப்பதற்காக பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் மக்கள் வெளியூர்களில் இருப்பவர்கள், கொரோனா காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பாமல் அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் வருடந்தோறும் தமிழகம் வரும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதுகுறித்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த முறை சொந்த ஊர் செல்வதற்கு குறைந்த மக்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதனால் இந்த முறை குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |