அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் கிடையாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் நிதிநிலை சிக்கனத்தை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. முடிந்தவரை செலவுகளை குறைத்து கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, துரிதப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்காக பல்வேறு அதிரடி உத்தரவுகளை அரசாங்கங்கள் பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் தமிழக அரசும் தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் அறிவிப்பாகவே இருக்கின்றது.
தமிழகத்தில் மார்ச் 10ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேரும் யாருக்கெல்லாம் ஊக்க ஊதியம் கிடையாது என்பது குறித்த விளக்க உத்தரவை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து விளக்கமான அறிக்கையில், இந்த உத்தரவு அனைத்து அலுவலர்களும் பொருந்தும். தமிழக அரசின் கீழ் வரக்கூடிய ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்டுள்ளது.