திருப்பூர்
உடுமலை துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட மானுப்பட்டி பீடர், பெதப்பம்பட்டி பீடர், கணபதிபாளையம் பீடர்களுக்கு உட்பட்ட ராகல் பாவி சுண்டக்காம்பாளையம், போடிபட்டி, பள்ளபாளையம், அண்ணா நகர், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, விஜி ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ராகல் பாவி பிரிவு ஆகிய பகுதிகளில் 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
சேலம்
சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரியங்காடு, பெரமச்சிப்பாளையம், வெள்ளாளபாளையம், கைக்கோள்பாளையம், மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்டாரம்பாளையம், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடசக்கரை காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
தர்மபுரி
மொரப்பூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியில் காரணமாக வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, இராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், அப்பியம்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை செய்யப்படும்.
தூத்துக்குடி
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின் தொடராகவும், மஞ்சத்தோப்பு மின் தொடராகவும் 2ஆக பிரிக்கும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மீதமுள்ள பணிகள் வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.
தூத்துக்குடி பீச் ரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் இனிகோநகர், ரோச்காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள உப்பள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில் தேரோட்டம் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, கீழரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, வ.உ.சி. ரோடு, டி.ஆர். நாயுடு தெரு, பங்களா தெரு, வரதராஜபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
கன்னியாகுமரி
குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட நடைக்காவு துணைமின் நிலைய பகுதியில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், கொல்லங்கோடு, நம்பாளி, வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது.
சிவகங்கை
திருப்புத்தூர் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான திருப்புத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர் மற்றும் மல்லாக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.