Categories
உலக செய்திகள்

இலங்கையில் அனைத்து கட்சிகளின் அரசாங்கம்…. இன்று நடக்கும் ஆலோசனை கூட்டம்…!!!

இலங்கையில் பிரதமரும் அதிபரும் ராஜினாமா செய்தவுடன் அனைத்து கட்சி அரசு முக்கிய ஆலோசனையை இன்று நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். எனவே, இலங்கையில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அரசை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று தொடங்கிய ஆலோசனை கூட்டம் இன்றும் தொடர்கிறது. இதனிடையே சபாநாயகரின் தலைமையில் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து நடத்தும் அரசாங்கம் குறித்து ஆலோசனை நடத்த இந்த கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதன்படி, வரும் புதன் கிழமையிலிருந்து புதிய ஆட்சி அமையும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |