Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BIG BREAKING : 9ஆம் வகுப்பு வரை ”ஆல் பாஸ்” புதுவை அரசு அதிரடி …!!

புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

புதுச்சேரியில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பிரதமருடைய வேண்டுகோளுக்கிணங்க அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் பின்பற்றப்படும். இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்க கூடிய அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுகின்றனர். 

புதுச்சேரியை பொறுத்த வரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்துள்ளது. 11ஆம் வகுப்புக்கு 1 தேர்வும்  , 10ஆம் வகுப்புக்கு முழு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் பள்ளி பாடத் திட்டத்தை பின்பற்றி 10, 11,12 தேர்வுகள் நடைபெறுவதால் இந்த உத்தரவு அமலாகி இருக்கின்றது. இந்த நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு  வரை புதுச்சேரி அரசினுடைய பாடதிட்டம் என்பதால் தற்போது அனைவரும் தேர்ச்சி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |