தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை முழுமையாக செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.