சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாள் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அரசுகள் பல்வேறு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. பல்வேறு மாநில அரசு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு இன்றி ”ஆல் பாஸ்” தேர்ச்சி என உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் அனைத்து வகையான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிபிஎஸ்இ கல்வித்திட்ட மாணவர்களின் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 9மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பருவமுறை, பயிற்சி தேர்வு போன்றவை அடிப்படையில் தேர்ச்சி என அறிவிக்கப்படுள்ளது.