சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கி நடைபெற்றது. இதனையடுத்து விரிவான உத்தரவுக்காக வழக்கு ஒத்திவைக்கப்ட்டு இருக்கின்றது. இதில் முன்னதாக சாட்சி வழங்கிய பெண் காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறி இருந்தார்கள். அதேபோல சிபிசிஐடி நீதியை நிலைநாட்டுள்ளது என்ற பாராட்டையும் நீதிகள் தெரிவித்திருந்தார்கள்.
இதையடுத்து சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களை 105 கிலோமீட்டர் தொலைவுள்ள கோவில்பட்டிக்கு அழைத்து செல்வது கடினம் என்பதால் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தலாம். தூத்துக்குடி மாவட்ட நீதிபதிக்கு அனைத்துவிதமான அதிகாரமும் வழங்கப்படும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.