Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கியது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 5ம் தேதி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்தது. மேலும் வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் இருந்து ரு.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.

மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு மட்டும் வங்கி மேலாளரின் அனுமதியுடன் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. யெஸ் வங்கியை நிர்வகிக்க எஸ்.பி.ஐ., வங்கியின் முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை நியமனம் செய்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சிக்கலில் உள்ள யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்.பி.ஐ., முடிவு செய்தது. அதுமட்டுமின்றி பல்வேறு வங்கிகளும் நூற்றுக்கணக்கான கோடிகளை யெஸ் வங்கியின் பங்குகளில் முதலீடு செய்தன. இதன் எதிரொலியாக யெஸ் வங்கியின் பங்குகள் 58% வளர்ச்சியடைந்தது.

இந்த நிலையில்இன்று மாலை 6 மணி முதல் எஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் தொடரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் வங்கி சேவை தற்போது தொடங்கிவிட்டதாக யெஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது எங்களின் முழு சேவையை வடிக்கையாளர்கள் பெறமுடியும். உங்கள் பொறுமைக்கும், ஒத்துழைப்பிற்கும் நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |