Categories
தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபாரில் கொரோனா பாதித்த 10 பேரும் குணமடைந்தனர்!

அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனாவால் பாதித்த 10 பேரும் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தலைமைச் செயலாளர் சேதன் சங்கி தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்கு பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கும் கொரோனா இல்லை என வந்துள்ளது. இதையடுத்து, 10 பேரும் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வாரங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பார்கள் என கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தாக்குதல் காரணமாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தான், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் தற்போது குணமடைந்துள்ளனர். இங்கு மொத்தம் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 பேரும் டெல்லியில் நடந்த தப்லீகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த தீவில் இருந்து ஒரு குழு கடந்த மார்ச் 16ம் தேதி இந்த மதக்கூட்டத்தில் பங்கேற்றது.

டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று இவர்கள் திரும்பியுள்ளனர். இதையடுத்து மார்ச் 24ம் தேதி இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 10 பேருக்கு கொரோனா உறுதியானது. 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |