கொரானா குறித்த வதந்திக்கு நடிகர் கஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது திரையுலகப் பிரபலங்கள் பலருக்கும் தொற்று உறுதியாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமல் மற்றும் வடிவேலு போன்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.
இந்நிலையில், பிரபல நடிகரான டி.பி.கஜேந்திரன் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. இந்நிலையில், இதற்கு நடிகர் கஜேந்திரன் ”எனக்கு கொரோனா தொற்று இல்லை” என விளக்கம் அளித்துள்ளார். இவரின் இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"எனக்கு #கொரோனா தொற்று இல்லை" – இயக்குனர் மற்றும் நடிகர் #டிபிகஜேந்திரன்#TPGajendran #CoronaUpdate #Tamilnadu pic.twitter.com/oTTsJWKwMo
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) January 6, 2022