Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதெல்லாம் ஏற்க முடியாது”….. அவங்களோட சேராதீங்க…. இப்பவாது காங்கிரஸ் உஷார் ஆகணும்….. எச். ராஜா அட்வைஸ்…..!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட6 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் காங்கிரஸ் மற்றும் பாஜக உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது ஏற்க முடியாத ஒன்று. எனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உடனடியாக வெளியே வர வேண்டும்.

மத்திய அரசு இந்தி மொழி திணிப்பில் ஒருபோதும் ஈடுபடாது. ஆனால் தமிழகத்தில் தான் தமிழ் மொழியை காப்பதற்கு தவற விட்டுவிட்டனர். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் படி ஆங்கில மொழிக்கு அடுத்து ஏதாவது ஒரு இந்திய மொழி தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 55 வருட திராவிட ஆட்சி காலத்தில் தமிழ் மொழியானது அழிந்து வருகிறது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் இரு மொழிக் கொள்கை என்று கூறிவரும் நிலையில், மாற்று மொழியை அடிப்படையாகக் கொண்டு 560 பள்ளிகள் இருந்து வருகிறது. அதன் பிறகு பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்துவிட்டு பாலின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர்த்தி விட்டனர்.

பாலுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்பது பால்வளத்துறை அமைச்சருக்கு தெரியவில்லை. இதனையடுத்து அமித்ஷா கூறியது போன்று தமிழகத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைந்து விட்டதால் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசின் மீது தற்போது வெறுப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த வெற்றிடத்தை நாம் வேகமாக நிரப்ப வேண்டும். அந்த இடத்தை வேகமாக நிரப்ப வேண்டும் என்று அமித்ஷா நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். மேலும் இது அரசியல் கட்சி தலைவர் அவருடைய நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் செயலே தவிர இது ஒரு அரசியல் விவாதத்திற்குரிய விஷயம் கிடையாது என்று கூறினார்.

Categories

Tech |